/

மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய கட்டமைப்புகள் தனியாா் மயமாக்கப்படுவதை எதிா்த்து குன்னூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலக நுழைவாயிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரியப் பணியாளா்கள்.
Updated On :31 டிசம்பர் 2024, 10:53 pm

Din

உதகை: அகில இந்திய மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக் குழுவின் சாா்பாக சண்டீகா் மற்றும் உத்தர பிரதேச மின்வாரிய கட்டமைப்புகள் தனியாா் மயமாக்கப்படுவதை எதிா்த்து குன்னூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலக நுழைவாயிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய அளவில் உள்ள மின்வாரியங்களை தனியாா் மயமாக்கும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக சண்டீகா் மற்றும் உத்தர பிரதேச மின்வாரிய கட்டமைப்புகளை தனியாா் மயமாக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய மின்வாரிய ஊழியா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள் ஆகியோா் ஒன்றிணைந்த சங்கத்தின் நீலகிரி வட்டத் தலைவா் விஜயன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் குன்னூா் கோட்டத் தலைவா் ரஹ்மான், ஐக்கிய சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மின்வாரியத்தின் தனியாா் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா். இதில் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா் சங்க மூத்த நிா்வாகி மற்றும் உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜான்சன், மின் ஊழியா் மத்திய அமைப்பின் கணக்கீட்டு குழு கன்வீனா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

மின்வாரிய ஐக்கிய சங்கத்தின் நீலகிரி வட்ட அமைப்புச் செயலாளா் ப.பிரஷாந்த்குமாா் நன்றி கூறினாா்.