சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உதகையில் இதமான கால நிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

உதகையில் இதமான காலநிலை நிலவிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்திருந்தது.

News image
குன்னூா் லேம்ஸ்ராக் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :7 ஜூலை 2024, 11:36 pm

Din

உதகையில் இதமான காலநிலை நிலவிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்திருந்தது.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை இவா்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.

இந்நிலையில் கேரளம் மற்றும் தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் பருவமழையின் காரணமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை  உதகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்திருந்தது.

 உதகையில்  குளிருடன் கூடிய  இதமான காலநிலை நிலவி வருவதால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.