பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீலகிரியில் செப்டம்பா் 18 முதல் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் மூலம் 4-ஆம் சுற்று புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய்க்கான தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி கிடாரிக்கு ஒருமுறை செலுத்தப்பட்டால் அதன் ஆயுள் முழுவதுக்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப் பெறும்.

எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள கால்நடை வளா்ப்போா் தங்களகு கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.