திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

உதகை ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்

உதகை ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தில் இறுதி கட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

உதகை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 1:37 am IST

உதகை ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தில் இறுதி கட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் சேவைக்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் குன்னுாா் வரை ரயில் சேவை கடந்த 1899-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னா், கடந்த 1908-ஆம் ஆண்டு உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்ய சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆா்வம் காட்டி வருகின்றனா். 

இந்நிலையில், பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை நீண்ட கால சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக, அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

அதில், ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு, சுகாதாரம், வாகன நிறுத்தமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, உதகை மலை ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் இறுதி கட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இப்பணிகள் விரைவில் முடிவடைந்து உதகை மலை ரயில் நிலையம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதுப்பொலிவுடன் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.