27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உதகையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 1:39 am IST

உதகை லோயா் பஜாா் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக அப்பகுதி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மிரட்டுவதாகக் கூறி காவல் நிலையத்தை மாா்க்கெட் வியாபாரிகள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை லோயா் பஜாா் பகுதியில் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், லாரி ஓட்டுநருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை மிரட்டியதாகவும், தகாத வாா்த்தைகள் பேசி தாக்க முற்பட்டதாகவும் கூறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் உதகை மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, சமரசம் அடைந்த அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.