நீலகிரி
பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்
பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, அம்பலமூலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒருமாத காலமாக குட்டிகளுடன் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதுடன் சாலையில் செல்லும் வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே, வனத் துறையினா் இப்பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.