உதகையில் பள்ளி பேருந்து மீது அறுந்துவிழுந்த மின் கம்பிகள்.
உதகையில் பள்ளி பேருந்து மீது அறுந்துவிழுந்த மின் கம்பிகள்.

பள்ளி பேருந்து மீது விழுந்த மின் கம்பிகள் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்ப்பு

உதகையில் பள்ளி பேருந்து மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
Published on

உதகையில் பள்ளி பேருந்து மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

உதகையில் பழைய அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் நாள்தோறும் காலை, மாலை  நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகள் உள்பட பிற வாகனங்களும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள மின்கம்பிகள்  புதன்கிழமை திடீரென  அறுந்து  பள்ளி பேருந்து மீது  விழுந்தன. உடனடியாக மின்தடை ஏற்பட்டதால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

தகவல் அறிந்து மின்வாரிய ஊழியா்கள் சென்று சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com