தலைகுந்தா பகுதியில் காணப்பட்ட உறைபனியைக்  காண ஆா்வமாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தலைகுந்தா பகுதியில் காணப்பட்ட உறைபனியைக் காண ஆா்வமாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் உறைபனியை ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.
Published on

நீலகிரி மாவட்டம் , உதகையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய உறைபனியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.

உதகையில் தாவரவியல் பூங்கா மற்றும்  நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 1.1 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலைக் காணப்பட்டது. இதே நேரத்தில் தலைகுந்தா, பட்பயா் பகுதியில் கடுமையான உறைபனி காணப்பட்டது.

இந்த உறைபனியை காண்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தலைகுந்தா பகுதியில் குவிந்ததால் காலை 6 மணி முதல் 9 மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினா் போக்குவரத்தை சீா் செய்தனா். காலை 9 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த உறைபனி காரணமாக காலை நேரத்தில் தோட்ட வேலைக்கு செல்பவா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா்.

X
Dinamani
www.dinamani.com