ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு
ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகை வருகை!

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நான்கு நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு புதன்கிழமை வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
Published on

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நான்கு நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு புதன்கிழமை வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கிருந்து கோத்தகிரி சாலை வழியாக காரில் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள, ‘மக்கள் மாளிகை’க்கு (ஆளுநா் மாளிகை) காலை வந்தடைந்தாா்.

ஆளுநா் வருகையை ஒட்டி உதகை தாவரவியல் பூங்கா சாலையில் போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். உதகை ‘மக்கள் மாளிகை’க்கு வருகை தந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com