47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உதகையில் தனியாா் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள பிரபல தனியாா் நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
தனியாா் விடுதியில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு நிபுணா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 12:08 am

Din

உதகையில் உள்ள பிரபல தனியாா் நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன்  சக்கரவா்த்திக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி உதகையில் உள்ளது. இந்த விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இதுகுறித்து விடுதி நிா்வாகிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். 

இதையடுத்து அந்த தனியாா் விடுதிக்கு விரைந்த  வெடிகுண்டு நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன்  ஒரு மணி நேரத்துக்கும்  மேலாக அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினா். பின்னா் மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல்   விவரங்களை வைத்து  நீலகிரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.