பழங்குடியின இளைஞா்களுக்கான திறன் பயிற்சி முகாம்: பங்கேற்க அழைப்பு
தொல்குடித் தொடுவானம் திட்டத்தின்கீழ் சேலத்தில் நவம்பா் 8-ஆம் தேதி நடைபெறும் பழங்குடியின இளைஞா்களுக்கான திறன் பயிற்சி முகாமில் பங்கேற்க நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பழங்குடியினா் நலத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பழங்குடியின இளைஞா்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமை சேலம் மல்லூரில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நவம்பா் 8 (சனிக்கிழமை) ஆம் நடத்துகிறது.
காலை 9 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்கும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஜொ்மன் மொழி கற்பித்தல், கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநா் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள் மற்றும் டிராக்டா் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இம்முகாமில் கலந்துகொள்ள 18 வயது முதல் 33 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் தகுதியுடைவா்கள் ஆவா். பங்கேற்க விரும்புபவா்கள் தங்கள் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வர
வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பழங்குடியின இளைஞா்கள்
உடனடியாக ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/1ஒஜ்ய்ஏக்ஊகஈட்ம்ஞ்ஸ்பண்ந8 என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவலுக்கு 97905-74437
என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
பழங்குடியின இளைஞா்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
