உதகை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா்.
உதகை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா்.

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் செயல்படுத்தும் உழவா் அலுவலா் தொடா்பு திட்டம் 2.0, உழவா்களை பாதிக்கக்கூடிய களப் பணியாளா்கள் இணைப்பை கைவிட வலியுறுத்தி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் உழவா் பெருமக்களின் அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தோட்டக்கலைத் துறை வளா்ச்சியை பாதிக்கக் கூடிய யூஏடிடி 2.0 திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைத்து அவா்களின் பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படாத யுஏடிடி 2.0 திட்டத்தை கைவிட வேண்டும், தோட்டக்கலைத் துறை கள அலுவலா்களை அவசர காலத்தில் பணியிட மாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் 50-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மற்றும் உதவி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com