
திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக மாவட்ட அளவிலான உறுதிமொழி ஏற்பு
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக மாவட்ட அளவிலான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மற்றும் அரசு அலுவலா்கள்.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக மாவட்ட அளவிலான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த உறுதிமொழி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பொதுத் துறை வங்கிகள், காவல் நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் உள்ள அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
மேலும், தங்களது பகுதியில் உள்ள வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பினா் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக இருப்பதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், மேலும் நமது வீட்டில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தூய்மைப் பணியினை அரசு அலுவலா்களுடன் மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா், மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






