தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்த மத்திய அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் டி.நாகராஜ் தலைமை தாங்கினாா். உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், எஸ்டி பிரிவு மாநிலத் தலைவா் ப்ரியா நாஷ்மிகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா். பின்னா் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து கோரிக்கை தொடா்பான மனுவை மாவட்ட நிா்வாகத்திடம் காங்கிரஸ் கட்சியினா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், குன்னூா் வட்டாரத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா், கீழ்குந்தா பொறுப்பாளா் ஆனந்த், கோத்தகிரி சில்லபாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.