விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா.
விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா.

புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி

கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

கூடலூா்: கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவாலயா நீலகிரி, கூடலூா் நகராட்சி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னா், நகரின் முக்கிய சாலைகள் வழியே விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் சுற்றுச்சூல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Dinamani
www.dinamani.com