உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.
இந்நிலையில் உதகையில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த கால நிலை நிலவியது. இதன் காரணமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கனிசமாக அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து தற்படம் மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
இங்கு நிலவும் குளு காலநிலையை அனுபவித்தவாறு புல்வெளி மைதானங்களில் சுற்றுலாப் பயணிகள் நடனமாடி உற்சாகமடைந்து மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










