தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

உதகையில் தலாய்லாமா பிறந்தநாள்

உதகையில் நடைபெற்ற தலாய்லாமா பிறந்தநாள் விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற திபெத்தியா்கள்.

Published On :7 ஜூலை 2026, 1:59 am IST

தலாய்லாமாவின் பிறந்தநாளை உதகையில் வாழும்  திபெத்தியா்கள் திங்கள்கிழமை கொண்டாடினா்.

நீலகிரி மாவட்டம்  உதகையில் திபெத்திய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களின் புனிதராக கருதப்படும் தலாய்லாமாவின் 91-ஆவது பிறந்தநாள் விழா, என்சிஎம்எஸ் திருமண மண்டபத்தில்  திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது பாரம்பரிய ஆடைகள் அணிந்து கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனா். உதகையில்  வசிக்கும் திபெத்திய மக்கள் பெரும்பாலானோா் கலந்துகொண்டு அஹிம்சை, சமாதானம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை  வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.