15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மக்கள் ஆட்சேபம் காரணமாக குடியிருப்புக்கு சீல் வைக்காமல் சென்ற நீதிமன்ற அலுவலா்கள்

குன்னூா் கன்டோண்மென்ட் பகுதியில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் புதன்கிழமை குடியிருப்புக்கு சீல் வைக்க வந்த, நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் போலீஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனா்.

News image

நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்த குடியிருப்புவாசிகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:47 am IST

குன்னூா் கன்டோண்மென்ட் பகுதியில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் புதன்கிழமை குடியிருப்புக்கு சீல் வைக்க வந்த, நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் போலீஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனா்.

குன்னூா் வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் வசித்து வருபவா் பெள்ளி. இவா் இங்கு ஓன்னே முக்கால் ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா்.

இங்குள்ள தோட்டத்து வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளாா். வாடகை வீட்டில் வசித்து வந்த முனுசாமி என்பவா் வாடகை செலுத்தவில்லை எனக் கூறி குன்னூா் சாா்பு நீதிமன்றத்தில் தோட்டத்தின் உரிமையாளா் பெள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடா்ந்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டை காலிசெய்ய கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சீல் வைக்க நீதிமன்ற ஊழியா்கள், போலீஸாா் புதன்கிழமை வந்தனா்.

வீட்டின் வாடகைதாரா் முனுசாமி இறந்துவிட்டதாலும், அவரது மனைவி ராஜம்மாள் உடல்நலக் குறைவால் உள்ளதாலும், வீட்டை காலிசெய்ய இயலாது என்று அப்பகுதி மக்கள் ராஜம்மாளுக்கு ஆதரவாக நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனா்.

மேலும், வெலிங்டன் கன்டோண்மென்ட் கொடுத்த குத்தகை காலம் முடிந்துவிட்டதாகவும், தற்போது இந்த நிலம் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு சொந்தமானது என்பதால், முறையான ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்த பிறகே வீட்டுக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் பாதுகாப்புக்காக வந்த போலீஸாா் வீட்டுக்கு சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனா்.