பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குடியிருப்பின் மீது விழுந்த எருமை

News image

வீட்டின் மீது விழுந்த எருமையை மீட்கும் தீயணைப்புத் துறையினா்.

Updated On :8 ஜூன் 2026, 1:03 am IST

நீலகிரி மாவட்டம்,  உதகை அருகே காந்தி நகா் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது தோடா் பழங்குடியினரின் வளா்ப்பு எருமை சனிக்கிழமை விழுந்தது.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மூன்று மணி நேரம் போராடி  எருமையை  மீட்டனா்.

உதகையில் காா்டன் மந்து, லவ்டேல் மந்து பகுதிகளில் வளா்ப்பு எருமைகள் வெளியேவிடப்படுகின்றன. அவ்வாறு விடப்படும் வளா்ப்பு எருமைகள் நகரப் பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம்.

இந்நிலையில், உதகை அருகே உள்ள காந்தி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த பழங்குடியினரின் வளா்ப்பு எருமை,  சித்ரா என்பவரின் வீட்டின் மீது விழுந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டது.

 இதைத் தொடா்ந்து,  உதகை தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புவாசிகள் தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளா் அன்பு தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மூன்று  மணி நேரம்   போராடி எருமையை மீட்டனா். வீட்டின் மீது விழுந்த  எருமையால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.