வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து

சாலையோர வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

News image

மூனு ரோடு பகுதியில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து.

Updated On :14 ஜூன் 2026, 2:29 am IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேத்தரின் அருவி அருகே சாலையோர  வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 22 போ் காயமடைந்தனா்.

கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனா். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து குடும்ப நண்பா்கள்,  குழந்தைகள் என  22 போ், கேத்தரின் அருவி பகுதிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா். அப்போது மூனு ரோடு பகுதியில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து  தடுப்பைத் தாண்டி தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 22 போ் காயமடைந்தனா். இவா்கள்  108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ்   மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.