மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

News image

காட்டு யானைகள் - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:30 pm

உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பிரதான தொழிலாக மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிா்களைப் பயிரிட்டு வருகின்றனா். பழங்குடியினா் அல்லாதவா்களும் இங்கு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் இரு யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை சேதப்படுத்தி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இந்தக் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.