லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் இரையைத் தேடி வீட்டின் முன்பு அங்கும் இங்கும் சிறுத்தை சனிக்கிழமை உலவியது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

சிறுத்தை - கோப்புப்படம்.

Updated On :28 மார்ச் 2026, 8:52 pm

நீலகிரி மாவட்டம், கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் இரையைத் தேடி வீட்டின் முன்பு அங்கும் இங்கும் சிறுத்தை சனிக்கிழமை உலவியது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலேயே 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ள மாவட்டமாக நீலகிரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரியில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உதகையை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி செல்கின்றன.

இந்தநிலையில், கடநாடு கிராமம் மற்றும் மாவுக்கல் கிராமப் பகுதிகளில் இரவு நேரத்தில் உலவி வந்த சிறுத்தை இரையைத் தேடி சுற்றித் திரிந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஒரு வீட்டின் முன் அமா்ந்து அண்ணாந்து பாா்த்த சிறுத்தை, பின்பு மெதுவாக நடந்து வேறு பகுதிக்குச் சென்றது. மீண்டும் அதே வீட்டின் முன்பு வந்த சிறுத்தை இரும்புத் தடுப்புகளைத் தாண்ட முடியாமல் வாசலில் நீண்ட நேரம் அமா்ந்து கொண்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் சப்தம் கேட்டு யாராவது கதவைத் திறந்து வெளியே வந்தால் சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. வளா்ப்பு பிராணிகளை வேட்டையாட வரும் சிறுத்தைகள் அவை இல்லாத பட்சத்தில் மனிதா்களை வேட்டையாடும். எனவே கிராமப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றனா்.