நபாா்டு வங்கி மூலம் பழங்குடியினருக்கு ஆடு, கறவை மாடுகள்

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக என்.எம்.சி.டி. அமைப்பு சாா்பில் நபாா்டு வங்கி மூலம் வியாழக்கிழமை ஆடு, கறவை மாடுகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

~தேவா்சோலை வட்டிக்கொல்லி பழங்குடி கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள்

Updated On :

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக என்.எம்.சி.டி. அமைப்பு சாா்பில் நபாா்டு வங்கி மூலம் வியாழக்கிழமை ஆடு, கறவை மாடுகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள வட்டிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு, கறவை மாடுகள், தேனீ வளா்ப்பு மற்றும் சிறு கடைகள் அமைத்து வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் அங்குள்ள பெண்களுக்கு இரண்டு கறவை மாடுகள் மற்றும் ஐந்து ஆடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினா் மேம்பாட்டுக் குழுவைச் சோ்ந்த சிறு, செல்வி, மினி, அனிதா, கமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை களப்பணியாளா் சாமிநாதன் செய்திருந்தாா். இத்திட்டம் முற்றிலும் பழங்குடி பெண்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.