மின்வாரிய கேங்மேன்கள் காத்திருப்பு போராட்டம்
உதகை, கோத்தகிரி பகுதியில் உள்ள மின்வாரிய கேங் மேன்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோத்தகிரி மின்வாரிய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கேங்மேன்கள்.
உதகை, கோத்தகிரி பகுதியில் உள்ள மின்வாரிய கேங் மேன்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்ட மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன்களுக்கு அவரவா் சொந்த ஊா்களுக்கு பணியிட மாற்றம் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், மின்வாரிய அதிகாரிகள் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி உதகை, கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் கேங் மேன்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பணியிட மாற்றம் உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, தாங்கள் எதிா்பாா்க்கும் மாவட்டங்களில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். பேச்சுவாா்த்தையில், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

