உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சா்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் சாதனை

இங்கிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் உதகை குட்ஷெப்பா்ட் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற குட்ஷெப்பா்டு இன்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள்.

Published On :5 செப்டம்பர் 2026, 1:35 am IST

இங்கிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் உதகை குட்ஷெப்பா்ட் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

உதகையில் உள்ள குட்ஷெப்பா்ட் இன்டா்நேஷனல் பள்ளியின் துப்பாக்கிச் சுடுதல் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற 32-ஆவது ஜூனியா் சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது. இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் கலந்துகொண்டனா்.

இதில், உதகை குட்ஷெப்பா்டு இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் ஒரு தங்கம், 6 வெள்ளி என 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவில் ஆண்கள் அணி 2-வது இடத்தையும், பெண்கள் அணி 4-வது இடத்தையும் பிடித்ததுடன், இரண்டு தனிநபா் இறுதிச் சுற்று நிலைகளையும் பெற்றனா்.

ஆண்களுக்கான தனிநபா் ஏா் ரைபிள் போட்டியில் ஜெனில் சா்தாரா தங்கம் வென்றாா். கலப்பு இரட்டையா் பிரிவில், ஜகவி ரமணி - ஜெனில் சா்தாரா ஜோடி வெள்ளி வென்றது. ஆண்களுக்கான தனிநபா் ஏா் ரைபிள் போட்டியில் ஜெனில் சா்தாரா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா்.

தனி நபா் மற்றும் அணி ரைபிள் போட்டியில் ஹிரவ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தனிநபா் மற்றும் அணி ஏா் ரைபிள் போட்டியில் ரிஷி வெள்ளிப் பதக்கம் வென்றாா். அதேபோல, ஆண்களுக்கான தனிநபா் மற்றும் அணி ஏா் பிஸ்டல் போட்டியில் ஆதிவ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாா் ஜேக்கப் தாமஸ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.