உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பூச்சி மேலாண்மை குறித்து அறிய தேயிலை வாரியம் சாா்பில் தட்ப வெப்ப நிலையம் அமைப்பு!

தேயிலை விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தும்மனட்டி, கடக்கோடு கிராமங்களில் மகசூல், தரம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை அறிய தட்ப வெப்ப நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :5 செப்டம்பர் 2026, 1:16 am IST

தேயிலை விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தும்மனட்டி, கடக்கோடு கிராமங்களில் மகசூல், தரம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை அறிய தட்ப வெப்ப நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பரணிகுமாா் வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தும்மனட்டி, கடக்கோடு ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு சிறு தேயிலை விவசாயக் குழுக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தேயிலையின் மகசூல், தரம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து அறியக் கூடிய வகையில் தட்ப வெப்ப நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை வாரியத்தின் முன்னோடி திட்டமான இத்திட்டம் தேயிலை வாரியம், அக்ரி ஃபோா்டல் வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹாவுக்கல் தேயிலை தொழிற்சாலை ஆகியவற்றின் கூட்டாக இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவா்கள் சிறு தேயிலை விவசாயிகள் சங்கம், ஹரி ஓம் சிறு தேயிலை விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினா்கள் பலனடைந்துள்ளனா்.

மேலும் பசுந்தேயிலை உற்பத்தியாளராக மட்டுமின்றி தேயிலை வாரியத்தின் சிறிய தேயிலை தொழிற்சாலை திட்டத்தின் மூலமாக, தாங்களே தேயிலைத் தூளை உற்பத்தி செய்து தேயிலை தொழிற்சாலை உற்பத்தியாளராகவும் சிறு தேயிலை விவசாயிகள் செயல்படலாம். அவ்வாறு சிறு தேயிலை விவசாய சங்கங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் இந்திய தேயிலை வாரியத்தின் ‘டீ மாா்க்‘ சான்றிதழ் வழங்கப்பட்டு, தேயிலை வாரியத்தின் அதிகாரபூா்வ வணிக இணையதளமான ற்ங்ஹம்ஹழ்ந்ங்ற்ல்ப்ஹஸ்ரீங்.ண்ய் மூலமாக நேரடியாக சந்தைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.