ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கோத்தகிரி அருகே வாகனங்களை சேதப்படுத்திய காட்டெருமைகள்

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த 4 காட்டெருமைகள், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தின.

காரை முட்டி தூக்கும் காட்டெருமை.

Published On :

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த 4 காட்டெருமைகள், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்ட வனத்தில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய 4 காட்டெருமைகள், கோத்தகிரி, எஸ். கைகாட்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தின.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் காட்டெருமைகளை விரட்ட முயன்றனா். ஆனால், அவை எந்தவித அச்சமுமின்றி அப்பகுதியிலேயே உலவின. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினா்.

சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் காட்டெருமைகள் தானாகவே வனத்துக்குள் சென்றன.

குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.