டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடந்த ஆண்டில் ரயிலில் அடிபட்டு 97 பேர் உயிரிழப்பு: விழிப்புணர்வு செய்தும் பயனில்லை

திருப்பூரில் கடந்த ஆண்டில் அஜாக்கிரதையாக தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல் போன்ற காரணங்களால் 97 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :2 ஜனவரி 2017, 8:06 pm

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூரில் கடந்த ஆண்டில் அஜாக்கிரதையாக தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல் போன்ற காரணங்களால் 97 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ரயில் விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க ஆண்டுதோறும், ரயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர், தற்கொலை செய்து கொள்வோர் என உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
2016-இல் திருப்பூரில் ரயில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே போலீஸார், ரயில்வே நிர்வாகம் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பதாகைகள் வைத்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இதில், தனியார் தன்னார்வ நிறுவனங்கள், பள்ளிக் குழந்தைகள் சார்பிலும் தெரு நாடகம், பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மலம் கழித்தல், ஆள் இல்லா ரயில்வே கேட் பகுதிகள், ரயில் வரும்போது, அஜாக்கிரதையாக தண்டவாளத்தைக் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் 2015-இல் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக 2016-லும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2015-ஐ பொறுத்தவரை ரயில் தண்டவாளங்களை அஜாக்கிரதையாக கடந்து செல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களினால் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதே அளவுக்கு, 2016-லும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில், கடந்த ஆண்டில் 13 பெண்கள் உள்பட 80 பேர் ரயில் வரும்போது தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல், தண்டவாளத்தையொட்டி மலம் கழித்தல் ஆகிய காரணங்களால் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். மேலும், ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து தவறி விழுந்ததில் 4 பேரும், தற்கொலை செய்து கொண்டதில் 2 பெண்கள் உள்பட 7 பேரும், இயற்கை மரணம் என்ற அடிப்படையில் ஒரு பெண் உள்பட 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில்
குறைந்த மரணங்கள்:
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், "திருப்பூரைப் பொறுத்தவரை நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் தொழிலாளர்கள் வேலைக்காக தண்டவாளங்களைக் கடந்து செல்வர். அவ்வாறு செல்லும்போதுதான் விபத்துகள் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இதன்படி, கடந்த இரு மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பிற மாதங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும். எனினும், மனித உயிரிழப்புகளைக் குறைக்கத் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.