பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் 80 ஆண்டு விழா
பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் 80 வது ஆண்டு விழா உடுமலையில் நடைபெற்றது.


பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் 80 வது ஆண்டு விழா உடுமலையில் நடைபெற்றது.
அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறை ஞானம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்
பி.கு.பீனாஜி தலைமை வகித்துப் பேசியது:
மனித குல மேம்பாட்டுக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் ஆன்மிகம், சமூகம், கல்வி, கலாசார தொண்டுகள் ஆற்றி வருகிறது. ஒவ்வொருவரது வாழ்வின் லட்சியத்தை உணரவைத்து மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பணியாற்றி வருகிறது இந்த இயக்கம். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், செயல் திறனை வளர்க்கவும், மனோரீதியான வியாதிகளை நீக்கி முழுமையான ஆரோக்கியத்தை உணர வைப்பதுதான் எங்களது நோக்கம் என்றார்.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் இருந் து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன், உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேலு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தரேசன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...