சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் விவேகம் மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தாராபுரம் விவேகம் மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் வட்ட சட்டப் பணிக் குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி பி.கருணாநிதி தலைமை வகித்தார். சார்பு நீதிபதி ஏ.சரவணக்குமார் முன்னிலை வகித்தார். முகாமில், இந்திய அரசியலமைப்பு சட்டம், சாலை பாதுகாப்பு, குடிமகன்களின் அடிப்படை உரிமைகள், சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து குற்றவியல் நடுவர் வி.சசிக்குமார், உரிமையியல் நீதிபதி என்.சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அரசு வழக்குரைஞர் கலைச்செழியன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com