தீ விபத்தில் ஒருவர் சாவு

சேவூர் அருகே, சின்னக்கானூரில் தீ விபத்தில் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

சேவூர் அருகே, சின்னக்கானூரில் தீ விபத்தில் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
சேவூர் அருகே, சின்னக்கானூர் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் பத்ரன்(42). இவர் கடந்த 3 ஆண்டுகளாக  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் குடிசை வீட்டில் புதன்கிழமை தனியாக இருந்தபோது, பீடியைப் பிடித்துவிட்டுக் கீழே போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தீயில் குடிசை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில், குடிசையின் உள்ளேயிருந்த பத்ரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, பத்ரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com