அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பல்லடத்தில் இலவசத் தையல் பயிற்சி

பல்லடம் - கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் அருகில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் மத்திய அரசின்

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:52 pm

DIN

பல்லடம் - கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் அருகில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் கூடிய இலவசத் தையல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு 45 நாள்கள் இந்த இலவசத் தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின்போது உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. பிளவுஸ், சுடிதார், நைட்டி, பெட்டி கோட், பட்டியாலா உள்ளிட்டவை தைக்க கற்று தரப்படுகிறது.
இதில், குறைந்தபட்சம் 6-ஆம் வகுப்பு படித்திருப்பவர்கள் சேரலாம். தினசரி காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் அதற்குரிய ஜாதிச் சான்றுகளைச் சமர்ப்பிக்கவேண்டும். பயிற்சி பெறுபவர்கள், தைப்பதற்கான துணிகளை மட்டும் எடுத்துவர வேண்டும்.
இம்மாத இறுதியில் இலவசத் தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதால் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.