வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ. 50 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுச் சந்தையில்,  காங்கயம் இன மாடுகள் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனையானது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:50 am

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுச் சந்தையில்,  காங்கயம் இன மாடுகள் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனையானது.
காங்கயம் அருகே,  நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில்,  இந்த வார சந்தையில் பசுக்கள்,  காளைகள், கன்றுகள் என 181 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 85 மாடுகள் மொத்தம் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனையானது.  இதில், ரூ.1 லட்சத்துக்கும் மேல் 5 பசுக்களும்,  ரூ. 7 லட்சத்துக்கு 20 கிடாரிக் கன்றுகளும் விற்பனையானது.  இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கு 9 மாத சினையுடன் செவலை பசு விற்பனையானது.
முத்தூர்,  மூத்தாம்பாளையம் பகுதி கால்நடை மருத்துவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சந்தையில் 10 பசுக்களுக்கு சினை பரிசோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.