திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பூர், ஜெய்நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் (18), ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (18), பூபதி (28) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முஜிபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து திருடியது எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






