உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பூஜ்ய நிழல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆசிரியர் கண்ணபிரான் பூஜ்ய நிழல் தினம் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கிப் பேசியதாவது:
சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக் குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும். ஆனால் வருடத்தில் 2 நாள்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளு க்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை 12 மணி உச்சி வேளையில் கூட காண இயலாது. நிழல் காண இயலா அந்நாளே பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது.
சூரிய ஒளியினால் உண்டாகக்கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக் கூடிய இடத்தின் அட்சய ரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி அளவில் இந்த பூஜ்ய நிழல் நிகழ்வை பள்ளி மாணவர்கள் உற்று நோக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








