
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி கலைக்கப்படும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்று திமுக
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.
விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
இந்தப் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும். உயர்மின் கோபுரத் திட்டத்தால் விவசாயம் பாதிப்படைகிறது. அதனை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
கேரளத்தில் கேபிள் வழியாகதான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இங்கு விளைநிலம் பாதிக்கின்ற வகையில் மின்கோபுரங்கள் அமைப்பது வேதனை அளிக்கிறது.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசு சொல்கிறபடி தமிழக அரசு செயல்படுவது கேவலம். தற்போது 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். அப்போது ஊழல் மிகுந்த அதிமுக ஆட்சி கலைக்கப்படும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஏற்படும்போது விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார்.
இதில், உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.பி.முத்துசாமி, காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட திமுக துணைச் செயலாளர் என்.சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





