டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை விபத்தில் முதியவர் சாவு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில், காங்கயம் சாலை, எல்.கே.ஏ. நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் (65). இவர் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு ஆயில் மில்லில் கணக்கராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மூலனூர் சாலை, மடாமேடு பிரிவு அருகே எதிரே நாச்சிபாளையம் ஆறுமுகம் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.