பனை மர விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருமாபாளையத்தில் பனைமர விதைகளை நடும் பணியில் சனிக்கிழமை மாணவர்கள் ஈடுபட்டனர்.


திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருமாபாளையத்தில் பனைமர விதைகளை நடும் பணியில் சனிக்கிழமை மாணவர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை இந்தியா கோடைக்கால 100 மணி நேரம் பயிற்சி முகாமின் ஒருபகுதியாக மாணவர்கள் கருமாபாளையம் பகுதியில் பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ராமையா தலைமை வகித்து பனை மர விதைகளை நடும் பணியைத் தொடக்கி வைத்தார். சேயூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பு அலுவலர் மோகன்குமார், மாணவர்கள் திட்டத் தலைவர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...