வெள்ளக்கோவிலை அடுத்த அய்யம்பாளையத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அய்யம்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதைனையொட்டி உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
நீளம் தாண்டுதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் திருவிழா, விளையாட்டுப் போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









