கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்குசிகிச்சை அளிக்க தாமதம் செய்த அரசு மருத்துவர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ

Updated On :5 நவம்பர் 2018, 7:43 am IST

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத  மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூரில் ஏழை பனியன் தொழிலாளியின் 4 வயது மகள் நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் வீட்டில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டு மாடியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.  உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை.  
மார்க்சிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், மாதர்சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர், இருப்பிட மருத்துவ அலுவலர் ஆகியோரிடம் செல்லிடப்பேசி மூலமாகச் பேசிய பிறகே  இரவு 7 மணிக்கு மேல் மருத்துவ சிகிச்சையைத் தொடங்கி உள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு குறித்து குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அன்றைய தினம் குழந்தைகள் நல அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
பணியில் இருந்த பெண் மருத்துவர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 15 மணி நேரம் தாமதம் செய்துள்ளார். 
மேலும், குழந்தையின் தாய் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அவரிடம் அந்த மருத்துவர் மிகக்கடுமையாக நடந்துகொண்டார்.  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள் எண்ணிக்கையையும், மருத்துவ உபகரணங்கள், இதர மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
குழந்தையிடம் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை  போலீஸார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.