திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான தொழில் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர், அவிநாசி சாலையில் உள்ள பப்பீஸ் ஹோட்டலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர், தேசிய சிறு தொழில் கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். புதிய தொழில் தொடங்குதல், சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிறப்புரையாற்றுகின்றனர். ஆகவே, ஆர்வமுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
