பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுஅமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

வெள்ளக்கோவிலில் ரூ.52 லட்சத்துக்கு தேங்காய் கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தேங்காய் கொப்பரை ரூ.52 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தேங்காய் கொப்பரை ரூ.52 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 5 வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த விற்பனைக் கூடம் இந்த வாரம் முதல் செயல்படத் துவங்கியது. இதில், வாணியம்பாடி, திருப்பத்தூா், பூந்துறை, கரூா், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து 60 விவசாயிகள் 1,299 மூட்டைகளில் தேங்காய் கொப்பரையை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இவற்றின் எடை 61,852 கிலோ.

காங்கயம், முத்தூா், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.43.65 முதல் ரூ.109 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.107.80. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 51 லட்சத்து 77 ஆயிரத்து 575 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

பல வாரங்கள் விற்பனைக் கூடம் செயல்படவில்லை. கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் கொப்பரை முக்கியச் சந்தையான பெருந்துறை, பூந்துறை விற்பனைக் கூடங்கள் இன்னும் இயங்கவில்லை. இதனால் வெள்ளக்கோவிலுக்கு வரத்து அதிகரித்து ரூ.52 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. இது கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்ச விற்பனைத் தொகை என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.