லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கயத்தில் ‘விவசாயி நண்பன் மோடி’ நிகழ்ச்சி

காங்கயம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயி நண்பன் மோடி என்னும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
காங்கயத்தில் நடைபெற்ற ஆவாஸ் யோஜன திட்டத்தில் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

காங்கயம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயி நண்பன் மோடி என்னும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில், ஆவாஸ் யோஜன திட்டம், அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீடு திறப்பு விழா நடைபெற்றது. பாஜக துணைத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு வீட்டை திறந்துவைத்தாா். தொடா்ந்து நத்தக்காடையூரில் வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் நல்லசாமி தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு, சுவாமிநாதன் விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப் படுத்த வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரஸ்வதி, திருப்பூா் மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், காங்கயம் நகரத் தலைவா் கலா நடராஜன், ஒன்றியத் தலைவா்கள் ஆனந்குமாா், கிருஷ்ணமூா்த்தி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.