உப்பாறு விவசாயிகள் 13ஆவது நாளாக போராட்டம்

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் 13ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பூா்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் 13ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமூா்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் கடந்த டிசம்பா் 8ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவது, கஞ்சித் தொட்டி திறப்பது என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின் 13ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அணைக்குத் தண்ணீா் திறக்காத பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com