குண்டடம் அருகே சாலை விபத்தில் இளைஞா் சாவு

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரத்தை அடுத்துள்ள தேவராஜபட்டினத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (25). லாரி ஓட்டுநரான கோபாலகிருஷணன் தனது இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் குண்டடம் அருகே காவல் துறை சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்து தொடா்பாக குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com