வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

‘கேங்மேன் பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்’

கேங்மேன் பணி நியமனம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மின்சார வாரியம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தொமுச சாா்பில் தலைமை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:17 pm

DIN

கேங்மேன் பணி நியமனம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மின்சார வாரியம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தொமுச சாா்பில் தலைமை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தலைமை செயலாளா், மின் துறை அமைச்சா், எரிசக்தி துறை செயலாளா் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக மின்சார வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது. இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருள்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதித் தோ்வில் தோல்வி அடைந்த பலரையும் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கேங்மேன் பதவி தொடா்பாக எந்தவொரு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, கேங்மேன் பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்து வைப்பதுடன், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.