திருப்பூர் மாவட்டத்தில் 200 மேற்பட்ட கோயில்களின் முன்பாக இந்து முன்னணியினர் போராட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் வழிபாட்டுக்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கோயில்களின்


தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் வழிபாட்டுக்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கோயில்களின் முன்பாக தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பொதுமக்களின் வழிபாட்டுக்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் பொதுமக்களின் வழிபாட்டுக்காகத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கோயில்களின் முன்பாக இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை (மே 26)) தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேல்பட்ட கோயில்களின் முன்பாக இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், திருப்பூர் ஈஸ்வரன் கோயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல், இந்து முன்னணி வடக்கு நகர் மேற்கு பகுதி சார்பில் கொங்கணகிரி முருகன் கோயில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் அரவிந்த், சுந்தர் சுரேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...