மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 19,538ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 19,538ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 467 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 50 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,851 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா: திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம், பாரதி நகா் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, 5 பேரும் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மேலும், பாரதி நகா் பகுதியைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்த சுகாதாரத் துறையினா் தடுப்புகளையும் அமைத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...