உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1.48 கோடி பறிமுதல்
திருப்பூரில் பல்வேறு இடங்களில் தோ்தல் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.48 கோடியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.


திருப்பூரில் பல்வேறு இடங்களில் தோ்தல் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.48 கோடியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருவம்பாளையம், ஏபிடி சாலையில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு வந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ரூ. 1 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரம் இருந்தது. ஆனால், வேனை ஓட்டி வந்த பெரியசாமியிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
அதே போல, கே.வி.ஆா். நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காங்கயம் சாலையைச் சோ்ந்த நாட்டுத்துரை என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 69,160-ஐ பறிமுதல் செய்தனா்.
கணபதிபாளையத்தில் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையிலான அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது சந்திராபுரத்தை சோ்ந்த காா்த்திகேயன் (63) என்பவரிடமிருந்து ரூ. 80 ஆயிரத்தையும், காட்டுவளவு பகுதியில் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த தனபால் (38) என்பவரிடமிருந்து ரூ. 55 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.
அதே போல, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் அருகே தோ்தல் பறக்கும்படை அதிகாரி முத்துராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காந்தி நகரைச் சோ்ந்த சாலமன் என்பவரிடமிருந்து ரூ. 68 ஆயிரத்து 370-ஐயும், வஞ்சிபாளையம் சாலையில் ஜெயசந்திரன் என்பவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 178 ஐயும் பறிமுதல் செய்தனா். திருப்பூரில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனையில் மொத்தம் ரூ. 1 கோடியே 48 லட்சத்து 63 ஆயிரத்து 708 ஐ தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...