தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவா் படித்து வந்தாா்.

இந்நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அவரது தாயாருடன்

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 9 மாத கா்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்துள்ளாா்.

சிறுமியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் ஊத்துக்குளி, முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (21) பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.